நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் ஐக்கிய அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் சிறப்பான வரவேற்ப்பை கொடுத்து, ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதன்பின், அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசிய […]
இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. கத்தார் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அப்போது, இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளையும் அந்த நாட்டு அரசு […]
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தி இரு தரப்பு போரை ஆரம்பித்தனர். அந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்தனர் . அதன் பிறகு இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடர்ந்தது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை காசா நகரில் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். […]
இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து நடைபெற்று வந்தது. இந்த போரில் முதலில் ஹாமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதே போல பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின. இரு தரப்பு போர் காரணமாக பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன […]
ஒசாமா பின்லேடன் தனது வளர்ப்பு நாய்களை ரசாயன ஆயுத சோதனைக்காக பயன்படுத்தினார் என பின்லேடனின் மகன் கூறியுள்ளார். உலக நாடுகளை அதிர வைத்த பயங்கரவாதி என்றால் அது அல்கொய்தா தலைவராக இருந்த மறைந்த ஒசாமா பின்லேடன் தான். அதுவும் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக அவன் இருந்தான் என்றே கூற வேண்டும். பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்க ராணுவம் கடந்த 2011 மே மாதம் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தவனை சுட்டு கொன்றது. பின்லேடன் மகன்களின் ஒருவரான உமர் பின்லேடன் அண்மையில் […]
கத்தாரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜகோபாலன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் ராஜகோபாலன் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர். வெளிநாட்டு வேலை என்று சென்று அங்கு எதோ சில காரணங்களால் உயிரிழக்கும் தமிழர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அண்மையில் தான் குவைத் நாட்டில் கொல்லப்பட்ட முத்துக்குமார் உடல் தமிழகத்திற்கு வந்து சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது, கத்தார் நாட்டில் தமிழக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் […]