கதிராமங்கலத்தில் 185வது நாளாக நேற்று பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதியில் பூமியில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் கடந்த ஜூன் 30ம் தேதி கசிவு ஏற்பட்டது. இதையடுத்து எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அதன் பின் ஜூலை 1ம் தேதி முதல் கதிராமங்கலத்தில் பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 12ம் தேதி முதல் ஐயனார் கோயிலில் காத்திருப்பு […]