ஆந்திரப்பிரதேச மாநிலம், ஐதராபாத்தில் உள்ள எல்.வி.பிரசாத் கண் மருத்துவமனையில், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவிற்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. பிரவீன் கிருஷ்ணா வேதவள்ளி தலைமையிலான மருத்துவர் குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் வெங்கய்யா நாயுடு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவரை, 3 நாட்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன