இந்தியாவில் பரவிவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், விமான நிலையம், வணிக வளாகம், ‘மெட்ரோ’ ரயில் நிலையம், ஓட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இதுபோன்ற இடங்களில், ‘அல்ட்ரா வைலட்’ எனப்படும், புற ஊதா கதிர்கள் மூலம், கிருமி நீக்கம் செய்யும், கோபுரத்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தற்போது உருவாக்கி அசத்தி உள்ளது. மேலும், […]
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே படவேடு சுற்றுப்புற பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் சிலர் நேற்று முன்தினம் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, பழங்காலத்தில் உலோகங்களை உருக்கிப் பொருட்கள் செய்ய பயன்படுத்திய பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர். படவேட்டில் உள்ள தாமரை ஏரியின் தென்கரையில் இந்த உலோக உருக்குப் பாறை இருப்பதை கண்டறிந்தனர். இந்த பாறையில் சுமார் அரை அடி ஆழம் கொண்ட, 100க்கும் மேற்பட்ட உரல் போன்ற குழிகள் காணப்படுகிறது. ஏற்கனவே, 1990ம் ஆண்டு படவேட்டில் உள்ள அம்மையப்ப […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிகள் சுபானா மற்றும் கீர்த்தனா ஆகியோர் SFT-SAT என்ற செயற்கை கோளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த செயற்கை கோள் மெக்சிகோவில் உள்ள ஏர்பேஸ்லா ஹீலியம் கேப்சூல் மூலம் விரைவில் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள மாணவிகள், இந்த செயற்கைக்கோள் மூலம் புவியின் பருவநிலை மாற்றங்களை கண்டுபிடிக்க முடியும். மேலும், வளி மண்டலத்தில் உள்ள உயிர்வளி, காரியமில வாயு, காற்றின் ஈரப்பதம், […]