மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அம்மாநில அரசிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. அம்மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படமால் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முடித்து உள்ளதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரத்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு சார்பில்உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. […]