கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் சிக்கிய சிம்லா..!
சிம்லாவில் தண்ணீர்ப் பஞ்சம் தீர்க்கப்பட்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் தயக்கமின்றி வருகை தர வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அங்கு கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதால், கார் உள்ளிட்ட வாகனங்களைக் கழுவவும், முக்கியப் பிரமுகர்கள் வீடுகளுக்கு லாரிகளில் தண்ணீர் விநியோகிக்கவும் உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இதனால், 50 சதவீத சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளால் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்துள்ளதால், சுற்றுலாப்பயணிகள் வருகை தரவேண்டும் என்று சிம்லா விடுதி […]