மீண்டும் அதிகரிக்கும் கொரோனா;இவை கட்டாயம் – மரு.செயலாளர் போட்ட உத்தரவு!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்  வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக நேற்று முன்தினம் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி,அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும், அக்கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: “அனைத்து கல்வி நிலையங்கள்,அலுவலகங்கள் என … Read more

#Breaking:பிரதமரே…இதனை தடுக்க நடவடிக்கை எடுங்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை:இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 105 மீன்பிடிப் படகுகளை,இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை 7-2-2022 முதல் 11-2-2022 வரை ஏலம் விட அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்தும்,இலங்கை அரசின் இந்தச் செயலை உடனடியாக நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக … Read more

#Breaking:”இந்த திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்” – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை:தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பாக அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறி மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: “2022 ஆம் … Read more

#Breaking:அதிகரிக்கும் கொரோனா..”அனைத்து மாநில அரசுகளும் இதனை உடனே செய்ய வேண்டும்”- மத்திய அரசு கடிதம்!

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,ஆக்சிஜன் கையிருப்பை உடனே உறுதிப்படுத்துமாறு கோரி அனைத்து மாநில அரசுகளுக்கு,மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ,ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு,கடிதம் … Read more

“பெரிய மாவட்டங்களை பிரிக்க இதனை அமைக்க வேண்டும்” – முதல்வருக்கு கடிதம் எழுதிய அன்புமணி ராமதாஸ்!

அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கும்.எனவே,தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் அனைத்து மாவட்டங்களையும் மறுசீரமைக்க அரசு முன்வர வேண்டும் எனவும்,இதற்காக மாவட்ட மறுவரையறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்றும் கோரி முதல்வருக்கு,அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு வகையான நிர்வாகச் சிக்கல்களுக்கு காரணமாக இருக்கும் மாவட்ட எல்லைகளை சீரமைத்தல் மற்றும் பெரிய மாவட்டங்களை பிரித்தல் பணிகளுக்கு மாவட்ட மறுவரையறை ஆணையம் அமைக்கக் வேண்டும் என்று கோரி … Read more

#Breaking:ரெட் அலர்ட்…மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு – முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்!

சென்னை:புயல் போன்ற ‘ரெட் அலர்ட்’ சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம்,பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட வேண்டும் என்று கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா … Read more

“மீண்டும் அதிகரிக்கும் கொரோனா;இரவு நேர ஊரடங்கு வேண்டும்” -மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்!

நாடு முழுவதும் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் முன்னதாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி,மக்கள் பலரும் இறந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு,கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. … Read more

#Breaking:”தலைமை நீதிபதி பணியிட மாற்றத்தை மறுஆய்வு செய்க”- 237 வழக்கறிஞர்கள் கடிதம்!

சென்னை:தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியின் பணியிட மாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி கொலிஜியத்துக்கு 237 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் கொலிஜியத்தின் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்தது. இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அவர்களின் பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று … Read more

#Breaking:நீட் தொடர்பாக 12 மாநில முதல்வர்களுக்கு – தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

நீட் தேர்வு தொடர்பாக 12 மாநில முதல்வர்களுக்கு  தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக மேற்கு வங்கம்,கேரளா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களின் ஆதரவைக் கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.மாநில அரசின் மருத்துவ நிறுவனத்தில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும்.கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும்,நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு … Read more

“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு வேண்டும்”- தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட 33 பேருக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்..!

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக தருமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் 33 தலைவர்களுக்கு பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் சமூக-பொருளாதார மற்றும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் மையத்தின் நிலைப்பாடு குறித்து தமிழக முதல்வர்  ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் 33 தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,சாதி அடிப்படையிலான மக்கள் தொகை … Read more