கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தனிச பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவரது மனைவி ரேவதி (32). இன்று காலை கணவனும் மனைவியும் கடலூர் புதிய கலெக்டர் அலவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து திடீரென்று உண்ணாவிரதம் இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உண்ணாவிரதம் இருந்த ரேவதி மற்றும் பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரேவதி போலீசாரிடம் மனு […]