Germany : ஜெர்மனியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகத்தில் அதிக நாடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் கஞ்சாவும் ஒன்றும். அப்படியான இந்த கஞ்சா பயன்பாடு ஜெர்மனியில் சட்டபூர்வமாக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இனிமேல் ஜெர்மனி நாட்டில் இருக்கும் 18 வயதினோர் 25 கிராம் கஞ்சாவை தங்களுடைய கையில் வைத்து கொள்ளலாம். அதைப்போல, ஒரு வீட்டில் 3 கஞ்சா செடி வரை வளர்த்து கொள்ளலாம். ஏற்கனவே, கஞ்சாவை பயன்படுத்த சட்ட ரீதியாக […]
இன்று காலை ஜெர்மனியில் ஓர் புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டதிருத்தம் தான் தற்போது உலகம் முழுக்க மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா எனும் போதை பொருளை ஜெர்மனி சட்டபூர்வமாக அனுமதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மசோதா மூலம் வரும் ஏப்ரல் மாதம் முதல் கஞ்சா ஜெர்மனியில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது போல பல்வேறு உலக நாடுகள் கஞ்சாவை சட்டபூர்வமாக […]
எதற்காக இந்த நடவடிக்கையோ, அந்த இலக்கை எட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என டாக்.ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு டாக்.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்றுவருவதாகவும், 403 கஞ்சா வணிகர்கள் கைது […]
தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கஞ்சா வேட்டை நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை […]
கஞ்சாவை முழு பயன்பாட்டிற்கு 2024க்குள் அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாம். உலக அளவில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களில் முக்கியமான இடத்தில் இருப்பது கஞ்சா. இந்த கஞ்சா பயன்பாட்டிற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. மருத்துவ பயன்பாட்டிற்காக ஒரு சில நாடுகள் இதனை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளன. இந்நிலையில் தற்போது முதல்முறையாக கஞ்சாவை முழு பயன்பாட்டிற்கு 2024 க்குள் அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பிட்ட வயதினை கடந்தோர் […]
581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக நீதிமன்றத்தில் கூறிய காவல்துறையினர். உத்திரபிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் மதுரா காவல்துறை அதிகாரிகள் 581 கஞ்சாக்கள் கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். ஷெர்கர் காவல் நிலையத்தில் 386 கிலோ கஞ்சாவும், நெடுஞ்சாலை காவல் நிலையத்தில் […]
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு […]
கோவையில் BMW சொகுசு காரில் இருவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் விநியோகத்தை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து காவல்துறை கட்டுப்படுத்தி வருகிறது. இருந்தாலும், இளைஞர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கும், இந்த கஞ்சா தினமும் பல்வேறு இடங்களில் பிடிபடுவது வேதனைக்குரியதாக இருந்தாலும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மன ஆறுதலையும் தருகிறது. இந்நிலையில், நேற்று போலீசார் கோவை, சாய் […]
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மூலம் கஞ்சா டோர் டெலிவரி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமாகி கொண்டே போவதால், நாளைய இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை தடுக்க பல்வேரு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால், ஆபரேஷன் கஞ்சா எனும் அதிரடி நடவடிக்கை மூலம் தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அவ்வப்போது கிலோ கணக்கில் கஞ்சா பல்வேறு […]
உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அமராவதி நகரில் சகோதரிகள் இருவர் வீட்டில் புதைத்து வைத்து கஞ்சா விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக்த்தில் கஞ்சா விற்பனை தற்போது அதிகரித்து வருவதை நாம் தினமும் செய்திகள் வாயிலாக பார்த்து வருகிறோம் . அதே போல, அதனை தடுக்க அரசு, காவல்துறையினர் மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி, அன்மையில் தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா விற்று வந்த சகோதரிகள் இருவரை கைது செய்துள்ளனர். திருப்பூர் […]
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதோடு அவர்களிடம் இருந்து கஞ்சாக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீசார் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக […]
மதுவை போல கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கல்யாணிபெட்டியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு கூறுகையில், போலி மது விற்பனையை தடுக்க தான் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது என கூறியுள்ளது. போலி மது விற்பனையை குறைப்பதற்காக டாஸ்மாக்கை திறந்துள்ளோம் என கூறும் தமிழக அரசால் கஞ்சாவையும் சட்டரீதியாக விற்க முடியுமா என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அதே சமயம் […]
தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கஞ்சா விற்ற வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகளானது நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, ஒருதுறையின் மீது குற்றம் சுமத்தும் போது, அந்த துறை நேர்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா […]
திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் பகுதியில் காரில் கடத்தவிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர்.மேலும் தெக்கலூரில் இருந்து திருப்பூருக்கு காரில் குட்காவை கடத்தி வந்த ராம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். DINADUVADU
கேரள மாநிலம் ஆலபுழா பகுதிக்கு செல்லும் மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக சேலம் ஜங்சன்ரெயில் நிலைய ஆர்.பி.எப்.போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் ஆர்.பி.எப்.போலீசார், மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகைக்காக ஜங்சன் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயிலில் இருந்து மர்மநபர்கள் யாராவது கஞ்சாவுடன் ஓடினால் அவர்களை பிடிக்க வேண்டி நடைமேடை மற்றும் நுழைவு வாயில், 5 பிளாட் பாரங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். காலை சுமார் 8.15 மணிக்கு […]
சத்தீஷ்கரில் கஞ்சா கடத்தப் பயன்படுத்திய ஆம்புலன்ஸ் வாகனத்தையும், அதிலிருந்த சுமார் ஆயிரம் கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கோர்பா மாவட்டத்தின் கட்கோரா பகுதியில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அனைத்து விதமான வாகனங்களையும் சோதனை செய்துள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அதையும் போலீசார் சோதனை செய்தபோது, ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டையாக கஞ்சா வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான […]