ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,’ ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என பாடிவிட்டு வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்து பாழாய் போய்விட்டார்.’ என்று கூறினார் சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியர் அவர்களின் 105-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சென்னை கிண்டியில்அமைந்துள்ள ராமசாமி படையாட்சியார் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்கள் ஓபிஎஸ் பற்றி கேட்கையில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். […]
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின்பதாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் உச்சநீதிமன்றம் பேபி அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்துள்ள நிலையில் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாகவும், அணையின் முழு அதிகாரமும் தமிழகத்திற்கு தான் உள்ளது எனவும் […]
30 வயதிற்குட்பட்ட தமிழகம் கல்லூரி மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு, வாக்குறுதியை நிறைவேற்றதுடன், கல்லூரி தேர்வு கட்டணங்களை இரண்டு ,மூன்று மடங்கு உயர்த்தி உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் கட்டணங்கள் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும். இதனால் மாணவர்கள் போராட்டம் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகிறது […]
துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக இன்று காலை 10 மணி முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சொத்து வரி உயர்வு, முதல்வரின் வெளிநாட்டு பயணம், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் தற்போதும் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.