வருடா வருடம் இன்றைய தினம் ஓய்வூதிய தினமாக கொண்டாடப்படுகிறது. 17-12-1982இல் உச்சநீதிமன்றம் ஓய்வூதியம் குறித்து தீர்ப்பளித்தது. 1982ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றமானது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அந்த தீர்ப்பை நீதிபதி D.S.நகரா வழங்கினார். அதாவது அரசு துறைகளில் பணி புரியும் ஊழியர்கள் பணி நிறைவு பெற்ற பின் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது உறுதிசெய்யப்பட்டது. அதிலும் எந்தவித பிரிவின் கீழ் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சமமான ஓய்வூதியத்தை வழங்கவும் உத்தரவிடப்பட்டது. […]