நாகர்கோவில்:நரிக்குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு,தாய்,தந்தை,குழந்தை ஆகியோரை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர்,நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்படுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் எனும் மீன் விற்கும் தாயாரை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெருமளவில் பேசப்பட்டது. தாயார் தனது மனக்குமுறலை பேருந்து நிலையத்தில் கதறலாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில் முதல்வர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து […]