ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததகாவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓசூர் அருகே நாகமங்கலத்தில் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஓசூரில் அரசு பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியாகி நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் இன்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. அப்போது அருகில் […]
ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் திமுக எம்.எல்.ஏ பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் (24) சென்ற ஆடி கார் பெங்களூரு அருகே விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். நள்ளிரவில் திமுக எம்எல்ஏ பிரகாஷ் என்பவரின் மகன் ஆடி சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில்,பெங்களூரு கோரமங்கலா அருகே சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது.இதில் […]
குழந்தையின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி. குழந்தையின் மரணம் கொலையா?அல்லது புதைக்காமல் வீசி சென்றார்களா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லை பதியான ஓசூர் மாநகராட்சி அருகே மத்தம் அக்ரகார பகுதியில் உள்ள முட்புதரில் பிஞ்சு குழந்தையின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.பின்னர் பிறந்து இரண்டு நாட்களே ஆன […]