தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி,6-வீரர், வீராங்கனைகளுக்கு பிரேசில் செல்ல விமானக் கட்டணமாக தலா ரூபாய் 30-ஆயிரம் வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு. 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பிரேசில் செல்லும் தமிழகத்தை சேர்ந்த 6-வீரர், வீராங்கனைகளுக்கு விமானக் கட்டணமாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள்: “பிரேசில் நாட்டில் வருகிற மே மாதம் […]
திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கினால், எங்கள் நாட்டு வீரர், வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம்,’ என கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தெரிவித்தன. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி-ஆகஸ்ட் மாதம் 9ல் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கவுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால் அமெரிக்கா, இங்கிலாந்து நட்சத்திரங்கள் உட்பட அந்த நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டியும் போட்டியை தள்ளி வைக்க […]
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம், ‘கோவிட்-19’ எனும் கொரோனா வைரஸ் பரவியது.2000க்கும் அதிகமான உயிர் பலி வாங்கி வரும் இந்த வைரஸ், சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனிடையே, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில், ஜூலை மாதம் 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் நடக்க உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலால், இது ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்தி வைக்கவோ திட்டமில்லை. […]