கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கியப் பொருளான மணல் விலையை திமுக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மணலின் விலையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமானதாக விளங்கும் சிமெண்ட், கம்பி, செங்கல்,மணல்,மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் […]