இந்தியாவில் 3 பேருக்கு ஒமிக்ரான் திரிபு வகை வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் மீண்டும் தொடங்கிய புதிய வகை கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. புதிய வகை ஒமிக்ரான் வகை இந்தியாவில் 2 மாநிலங்களில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குஜராத்தில் 2 பேருக்கும், ஒரிசாவில் ஒருவருக்கும் புதிய வகை ஒமிக்ரான் திரிபு BF.7 எனும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
லக்கேஜ் திருடப்பட்ட வழக்கில் பெண்ணிற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரயில்வேக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2015இல் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ரணக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது அந்த பெண்ணின் உடமைகள் திருடப்பட்டது. பெண் உடனே டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார். அவர் தொலைத்த உடமைகளில் உடைகள் தவிர்த்து ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பஷ்மினா சால்வை உட்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அந்த […]