இந்தியாவில் 3 பேருக்கு ஒமிக்ரான் திரிபு வகை வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் மீண்டும் தொடங்கிய புதிய வகை கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. புதிய வகை ஒமிக்ரான் வகை இந்தியாவில் 2 மாநிலங்களில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குஜராத்தில் 2 பேருக்கும், ஒரிசாவில் ஒருவருக்கும் புதிய வகை ஒமிக்ரான் திரிபு BF.7 எனும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 374 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,72,626 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்வு. இது தொடர்பாக,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 700 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,47,72,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் 34 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பெருக்கும் மற்றும் […]
தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. சென்னை டிஎம்சி வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு […]
நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்றை தினம் வரை 223 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 104 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 16 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசு தரப்பில் […]
அமெரிக்கா:கொரோனாவை குணப்படுத்த ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை தீவிரமாக பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக,கொரோனா தொற்றால் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு,மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் அதிகப்படியான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.ஒரு வழியாக கொரோனா பரவல் முடிவுக்கு வரவுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது. இதனைத் […]
நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். தென்னாப்பிரிக்காவில் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றானது,பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.அந்த வகையில் இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதன்படி,நாட்டில் மகாராஷ்டிரா,கர்நாடகா, தெலுங்கானா,டெல்லி,ஆந்திரா,கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று,ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவில் முதல் […]
அமெரிக்கா:கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் 50 கோடி(500 மில்லியன்) பேருக்கு இலவசமாக கொரோனா விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை தீவிரமாக பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக,கொரோனா தொற்றால் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு,மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் அதிகப்படியான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.ஒரு வழியாக கொரோனா பரவல் முடிவுக்கு வரவுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,தென்னாப்பிரிக்காவில் […]
ஆந்திரா:சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கென்யாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து,அங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்ற 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும்,அப்பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்,ஆந்திரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடு முழுவதும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ள நிலையில், நாளை ஆலோசனையில் ஈடுபடுகிறார். நாட்டில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று, ஜம்மு காஷ்மீர் […]
டெல்டாவைவிட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக் கூடியது என மத்திய அரசு தகவல். இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா தொற்று பரவல் 10% மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். டெல்டாவைவிட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு […]
பிற மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும்,அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது,அவர்களைக் கண்டறிந்து கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஒமைக்ரான் வைரஸ் பரவத் துவங்கினால் மீண்டும் ஒரு பேரிடரை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள் என்றும், எனவே,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி, ஒமைக்ரான் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்திட ஏதுவாக வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாக தமிழ்நாட்டிற்குள் நேரடியாக வருபவர்களையும்,வேறு மாநிலத்திற்கு விமானம் மூலமாக வந்து தரை வழியாகவோ […]
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 200 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 200 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக,மகாராஷ்டிராவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 54 பேரில் 28 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல,டெல்லியில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 54 பேரில் 12 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,தமிழகத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. India has a total […]
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் (நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) டிசம்பர் 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம்,கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்தது. எனினும்,தற்போது இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் […]
கர்நாடகாவில் புதிதாக 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தகவல். கர்நாடகாவில் புதிதாக நேற்று 5 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 5 பேருமே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளத்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் […]
தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 15 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது.இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,அந்த வைரஸிற்கு […]
சென்னை:நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,அது ஒமிக்ரான் தொற்று பாதிப்பா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்,அவருடன் தொடர்புடைய 6 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்துள்ள ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றனாது,உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா,கர்நாடகாவில் பரவிய நிலையில் இதுவரை நாடு முழுவதும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும்,ஒமிக்ரான் பாதிப்பு […]
ஊரடங்கை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமிக்ரான் தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்படவில்லை. ஊரடங்கை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 முதுகலை படிப்புக்கான சேர்க்கை இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் கூறினார். இதனிடையே பேசிய அமைச்சர், இணையத்திற்கு அடிமையாகி தவிக்கும் சிறுவர்கள், மாணவர்களுக்கும் தொலைத்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கு இணையதள […]
சென்னை:தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும்,கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஒமிக்ரான் தொற்று இதுவரை 50 நாடுகளுக்குப் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,ஒமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்க அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள […]