பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என அறிவிப்பு. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்து வந்த நிலையில், இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு ஒப்பந்ததாரர்கள் ரூ.10 கோடிக்கும் மேலான ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் இரண்டாம் வகுப்பு ஒப்பந்தரராகள் ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடி வரை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் […]