சென்னை:எண்ணுர் அனல்மின் நிலைய (1x 660 மெகாவாட்) விரிவாக்கத் திட்டத்திற்காக வருகின்ற பிப்.25 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில்,எண்ணுர் அனல்மின் நிலைய (1x 660 மெகாவாட்) விரிவாக்கத் திட்டத்திற்காக வருகின்ற பிப்.25 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி […]
சென்னை:ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.அதாவது, ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும்,கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் […]
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை,மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தனர்.இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் நடத்த முடியாமல் போய்விட்டது.இது தொடர்பாக மத்திய அரசு இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது. இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று […]
புதுச்சேரியில் நாளை 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில், அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் 8 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் […]
திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கினால், எங்கள் நாட்டு வீரர், வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம்,’ என கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தெரிவித்தன. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி-ஆகஸ்ட் மாதம் 9ல் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கவுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால் அமெரிக்கா, இங்கிலாந்து நட்சத்திரங்கள் உட்பட அந்த நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டியும் போட்டியை தள்ளி வைக்க […]
திராவிட முன்னேற்ற கழகட்தின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் (98) அவர்கள் கடந்த 7ம் தேதி காலமானார். இவர், கடந்த 1977ம் ஆண்டு முதல், தொடர்ந்து 43 ஆண்டுகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு வருகிற 29ம் தேதி கூடும் என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் மண்டல பரிஷத் மற்றும் ஜில்லா பரிஷத் உள்ளாட்சி பிரிவுகளுக்கான தேர்தல் ஆனது வரும் 21 ந் தேதியும்,நகராட்சி மற்றும் மாநகராட்சிக்களுக்கான தேர்தல் 23ந்தேதியும் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும் மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில தேர்தல் ஆனையர் தெரிவித்துள்ளார். இது குறித்து அம்மாநில தேர்தல் ஆணையர் […]