ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு..!
தென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. கள்ளிமந்தயம், காவேரியம்மாபட்டி, மூலசத்திரம், சத்திரப்பட்டி, கேதையெறும்பு, அத்திக்கோம்பை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் அதிக அளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்காய விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பட்டறைகளில் வெங்காயங்களை பதுக்கி வைத்தனர். மேலும் குறைந்த அளவே விலை போனதால் அவர்கள் கவலையில் […]