தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக ஏ.டி துரைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார். ஊர்க்காவல்படை கூடுதல் கமாண்டன்டாக ஏ.டி.ஜி.பி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் காவல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஏ.டி.ஜி.பியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா வடக்கு […]