சத்குரு, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் COP 15 மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் COP 15 மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 195 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு மண்ணில் குறைந்தப்பட்சம் […]
ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் வரும் 26-ஆம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது இரண்டு மாதங்களாக போர் தொடுத்து வருகின்ற நிலையில், இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் உக்ரைன் நாட்டை விட்டு அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதோடு, போரை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் எந்த […]
இலங்கையில் பதற்றத்தை தணிக்க சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் என ஐ.நா அறிவுரை வழங்கியுள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு […]
ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு அமைப்பு உலக நாடுகளில் உள்ள மக்களின் மகிழ்ச்சியை, நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவது உண்டு. அந்த வகையில் 2021- ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சியான நாடுகள் முதல் எட்டு இடங்களில் ஐரோப்பிய நாடுகள் உள்ளது. உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 146 நாடுகள் இடம் பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து 5-வது முறையாக பின்லாந்து […]
உக்ரைனில் இருந்து 10 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்றுள்ளதாக ஐ.நா தகவல் உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய […]
ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மத்தியில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறினர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா உள்ளிட்ட பிற ஆதரவு நாடுகள் தெரிவித்துள்ளன. உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, […]
ரஷ்ய படையினரின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிலிருந்து 3.68 லட்சம் பேர் அகதிகளாக போலாந்து, மால்டோவா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. […]
சென்னை: “All Human, All Equal” என்பதை இந்த ஆண்டுக்கான உலக மனித உரிமைகள் நாள் முழக்கமாக ஐ.நா.அவை அறிவித்துள்ளது.இந்நாளில், ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் பாதுகாத்திடவும் உறுதியேற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 1948 டிசம்பர் 10 ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு,ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் “மனித உரிமைகள் நாளாக” கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் […]
2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. உலகளாவிய நீர் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில்,தற்போது நடப்பு ஆண்டுக்கான நீர் மேலாண்மை,காலநிலை சேவைகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து உலக வானிலை அமைப்பு (டபிள்யுஎம்ஓ) அறிக்கை வெளியி்ட்டுள்ளது.அந்த அறிக்கையில்,மேம்பட்ட நீர் மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் முன்னறிவிப்பு தேவை என்று ஐநா உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக உலக வானிலை அமைப்பு பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டெரி […]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. சபை வெளியிட்ட முதல் அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது. ஆனால், ஐ.நா சபை வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சபையின் மனித உரிமை மீறல் மீதான அறிக்கை வெளிப்படையான பாரபட்சம் மற்றும் தவறான கதையை உருவாக்கும் முயற்சி […]
சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்த மாகாணத்தின் பின்னிஷ், ராம் ஹம்தான், டப்தனாஸ் கிராமங்களை குறிவைத்து நேற்று முன்தினம் சிரிய அரசு படைகள் வான்வழி தாக்குதலை அரங்கேற்றின. சுமார் 2 மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் வீடுகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இந்த கொடூர தாக்குதலில் […]
1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு […]
சர்வதேச விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு […]
அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் என கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அதிகரித்து வந்த வடகொரியா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. அணு ஆயுத சோதனையை கைவிடுவதாக அறிவித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பகைமையை மறந்து வடகொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைக்கும் தயாராகி உள்ளன. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. […]