கடலூர்:தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடலூரில் தேமுதிக பிரமுகரும்,பிரபல தொழிலதிபருமான ஜெய்சங்கர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி,விருத்தாச்சலத்தில் உள்ள பள்ளி,நெய்வேலியில் உள்ள நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். இவர் கடந்த தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.