இந்தி திரைப்பட உலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனிக்கு ஐரோப்பிய யூனியன் சார்பாக விருது வழங்கப்பட்டது. ஐரோப்பிய யூனியன் சார்பாக நேற்று மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஐரோப்பிய யூனியன் தூதரகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் பச்சனுக்கு, இந்தியா-ஐரோப்பிய கலாச்சாரங்கள் மேம்படும் வகையில் பணியாற்றி, பாலமாக விளங்கியதற்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் அமிதாப் பச்சனுடன் அவரது மகள் ஸ்வேதா பச்சன் கலந்து கொண்டார். இதுகுறித்து டுவிட் செய்துள்ள அமிதாப், விருது […]