வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதேபோல குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. […]
கடந்த 39 நாட்களில் 223 கோடி வருமானம் கிடைத்துள்ளது என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது. கேரளா, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு ஜோதி தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தங்கள் யாத்திரையை தொடர்ந்து வருகின்றனர். இன்று நடை திறந்து 41வது நாள் ஒரு மண்டலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு மண்டல பூஜை மதியம் 12.30 மணியளவில் தொடங்க உள்ளது. நடை திறந்து 39 நாள் வருமானத்தை நேற்று சபரிமலை […]
சபரிமலையில் மண்டல பூஜையன்று பக்கதர்கள் கூட்டத்தை தவிர்க்க அன்று மட்டும் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (நவம்பர் 17) சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை தரிசனத்திற்கு தயாராகி வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்து 41வது நாள் மண்டல பூஜை நடைபெறும். வெகு விமர்சியாக நடைபெறும் இந்த மண்டல பூஜையை காண பக்தர்கள் லட்சக்கணக்கானோர் வருவார்கள். இதில், […]
கேரளாவில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி சபரிமலை கோயில் திருவிழா கொடியேற்றம் 19-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, மார்ச்-18 ஆம் தேதி, பம்பையில் ஐயப்பனுக்கு ஆறாட்டு விழா நடைபெறுகிறது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் போது மட்டுமின்றி ஒவ்வொரு மலையாள மாதமும் முதல் தேதியில் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்படும் அவ்வாறு திறக்கப்பட்டு அய்யனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதே போல கோவில் திருவிழா நாட்கள் மற்றும் பிரதிஷ்டை தினம்,விஷூ பண்டிகை மற்றும் ஓணம் பண்டிகை போன்ற சிறப்பு நாட்களில் நடை திறக்கப்படும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் எல்லாம் நடைபெறும். அதன் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜை நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த தங்க அங்கி கடந்த 22ந் தேதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரப்பட்டது.இன்று பூஜை முடிந்தவுடன் நடை சாத்தப்படுவதால், 41 நாட்கள் மண்டல பூஜை முடிவிற்கு வரும். இதனை அடுத்து மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ந் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். […]