தஞ்சாவூரில் ஆதீஸ்வரர் சுவாமி கோவிலில் 3 அடி உயரமுள்ள ஆதீஸ்வரர் ஐம்பொன் சிலை மற்றும் 13 வெண்கல சிலைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம நபர்கள். கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பூக்குளம் பகுதியில் ஜைன முதலி தெருவில் ஆதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபடும் இந்த […]