ஐபிஎல் பிளே ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டியில் பெங்களூரு அணி,ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது.இப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது, இப்போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணிபந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி,பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக டூப்ளசிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.ஆனால்,வந்த வேகத்திலேயே விராட் ஒரு சிக்ஸர் மட்டும் அடித்து 7 ரன்களிலேயே விக்கெட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து,ரஜத் படிதார் களமிறங்கிய நிலையில் டூப்ளசிஸ் உடன் இணைந்து சிறப்பான […]