கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹாமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1100 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்ததில் பெரும்பாலும் பொதுமக்களே அதிகம் என இஸ்ரேலிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் போது சுமார் 250 பேரை பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஹமாஸ் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் […]
கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் போரின் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வார காலம் போர் இடைநிறுத்தம் செய்யப்பட்டது, அப்போது இஸ்ரேலிய […]
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இந்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த ரஷ்யா கோரிக்கை வைத்த நிலையில், அதனை எதிர்த்து இந்தியா வெளிப்படையான வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அண்மையில் உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் உக்ரைனிலுள்ள சிறுமிகளை ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்து வருவதாக செய்திகள் வெளியாகி பலரது கண்டனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தினரால் அரங்கேறும் மேலும் கொடுமையான ஒரு விஷயம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அதாவது ரஷ்ய ராணுவத்தினரால் உக்ரைனிலுள்ள பெண்கள், சிறுமிகள் மட்டுமல்லாமல் ஆண்கள் மற்றும் சிறுவர்களும் பலாத்காரம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என ஐநா அதிகாரிகள் […]
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரேனில் இருந்து அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. தொடரும் தாக்குதல் இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த […]
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட கூடாது என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டில் குடியிருந்த பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்குக் குடி பெயர்ந்தனர். இந்நிலையில், நேற்று அமெரிக்க ராணுவம் முழுவதுமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. மேலும் தாங்கள் வெளியேறிவிட்டாலும், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் […]
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் கடும் சவாலான சூழலை சந்த்தித்து வருகிறது. எனவே மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க உலக நாடுகள் முழுவதிலும் முழு ஊடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அவை தற்போது அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்தால், உலகில் கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படும். இதனால் உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்படும் என ஐக்கிய நாடுகளின் மக்கள் […]