நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடுகிறது என தலைவர் ரவி பச்சமுத்து அறிவிப்பு. சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மக்களின் செல்வாக்குடன் இந்திய ஜனநாயகக் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. அனைத்து மக்களுக்கும், அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் நோக்கம். பல்வேறு துறைகளில் மக்களுக்கு தேவையானதை […]