IPL 2024 : கிரிக்கெட் ரசிகர்களின் ஒரு வருட எதிர்ப்பார்ப்பாக இருந்து வரும் 17-வது ஐபிஎல் தொடர் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டிகளில் பிசிசிஐ புதிய விதிகளை கொண்டு வந்தது. Read More :- இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ? இது வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக […]
ICC : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை போட்டியானது வருகிற ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கி ஜூன்-30ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே டி20 உலகக்கோப்பை தொடங்கி விடும். டி20 உலகக்கோப்பைக்கு ஒரு பயிற்சி ஆட்டமாகத்தான் இந்த ஐபிஎல் தொடரை அனைத்து அணி வீரர்களும் விளையாடுவார்கள். அதனால் நடைபெற போகும் இந்த டி20 போட்டியில் இடம் பிடிக்க இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வீரரும் தனது சிறப்பான விளையாட்டை […]
ICC : ஐபிஎல், டி20 கிரிக்கெட் போட்டிகள் உருவெடுத்த பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் ODI கிரிக்கெட் போட்டிக்கும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் முக்கியத்துவம் தருவதை குறைத்து விட்டனர். ஆனால், கடந்த 5-6 வருடங்களாகேவே இந்த நிலை மாறி உள்ளது. அதிகமான இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியிலும், ஓடிஐ போட்டியிலும் ஆதிக்கங்கள் செலுத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய […]
#NZvsAUS : நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதை தொடர்ந்து பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்தது. இந்த போட்டிக்கு முன்னர் நியூஸிலாந்து அணியின் இடது கை வேக பந்து வீச்சாளரான நீல் […]
Three ICC Trophies : அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள் நடைபெற இருப்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை தற்போது உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளை வென்றுள்ள நிலையில் இங்கிலாந்து ஒரு போட்டியை கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி போட்டியானது வரும் 7ம் தேதி […]
இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ஆன ரோஹித் சர்மா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். அவருடன் ஜடேஜாவும் கூட்டணி அமைத்து விளையாடி கொண்டிருந்த நிலையில் தற்போது மார்க் வுட்டின் பந்து வீச்சில் அவுட் ஆகி உள்ளார். இந்த போட்டியில் அவர் 196 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார். அதில் […]
இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் 3 தொடர் கொண்ட ஒருநாள் போட்டிகளில், இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபி ஆட்டமனது மிக சிறப்பாக இருந்தது. இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் முகமது நபி 136 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அந்த போட்டியில் அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். அதன் அடிப்படையில் தற்போது இவர் ஐசிசியின் ஒருநாள் ( ODI ) ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முகமது […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. அதே நேரத்தில், ஒரு புறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையும் பாதிக்கப்பட்டது. மறுபுறம் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023 ஆம் ஆண்டிற்கான ஆடவர் ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு ஆஸ்திரேலியர்கள், இரண்டு தென்னாப்பிரிக்கர்கள் மற்றும் ஒரு நியூசிலாந்து வீரர் மற்றும் மொத்தம் ஆறு பேர் கொண்ட இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் இடத்தில் ரோஹித் ஷர்மா, 2023 -ல் அவரது சிறந்த தலைமைத்துவம் மற்றும் பேட்டிங் செயல்திறன் காரணமாக இந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2023 […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023-க்கான டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு மூன்று வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இந்த மூன்று வீரர்களில் ஒருவர் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார். ஆனால் ஐசிசியின் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று வீரர்களில் இந்திய அணியில் இருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை. ஐசிசி தனது இணையதளத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாட் கம்மின்ஸ், […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), முடிவு மறுஆய்வு செய்யும் டிஆர்எஸ் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்து அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி கொண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தேவைப்படும் புதிய விதிமுறைகள் அல்லது ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களை ஐசிசி செய்வது வழக்கமான ஒன்று. இதில், குறிப்பாக கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது முடிவு மறுஆய்வு (டி.ஆர்.எஸ்) முறை என்ற புதிய விதிகள் கொண்டு […]
2024ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்த முறை இரண்டு நாடுகளில் அதாவது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைவரது எதிர்பார்ப்பும் தற்போது டி20 உலகக்கோப்பை மீதுதான் உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், […]
கிரிக்கெட்டில் ஆண்கள் எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுகிறார்களோ, அதே அளவிற்கு பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால், பலரும் கிரிக்கெட்டில் பெண்களை விட ஆண்கள் எடுத்த சாதனைகளைத் தான் அதிகம் பேசுவார்கள். அப்படி பேசப்படும் ஒன்றுதான், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் டெண்டுல்கர். ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அசாதாரண சாதனையை ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனைப் படைத்துள்ளார். அவர் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான […]
எம்ஆர்எஃப் டயர்ஸ் ஐசிசி மகளிர் டி20ஐ வீராங்கனைகள் (ICC Women’s T20i Player Rankings) தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பேட்டர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வீராங்கனை தஹ்லியா மெக்ராத் 794 புள்ளிகளுடன் முதலிடத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவதாக பெத் மூனி 764 புள்ளிகளுடன் உள்ளார். ஐந்தாவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வோல்வார்ட், கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான டி20ஐ தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 49* ரன்கள் எடுத்தார். இதனால் பேட்டர்களுக்கான தரவரிசையில் வோல்வார்ட் […]
2023 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் விதிகளை ஐசிசி மாற்றியுள்ளது. போட்டியின் வேகத்தை அதிகரிக்க புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு போட்டியில் ஒரு ஓவர் முடித்து அடுத்த ஓவரைத் தொடங்க பந்துவீச்சாளர் 1 நிமிடம் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். அடுத்த ஓவரைத் தொடங்க பந்துவீச்சாளர்கள் 1 நிமிடத்திற்கு மேல் மூன்று முறை எடுத்துக் கொண்டால் பந்துவீசும் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என்று கிரிக்கெட் நிர்வாகக் குழு ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விதி […]
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இதில், சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த சூழலில் தற்போது அனைவரது எதிர்பார்ப்பும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசியின் டி20 உலகக்கோப்பை மீதுதான் உள்ளது. அதன்படி, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 […]
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்லன் சாமுவேல்ஸ் மீது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சூதாட்ட புகார் வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் அபுதாபி டி10 லீக்கில் விளையாடினார். அப்போது கிரிக்கெட் சட்ட விதிகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் முன்வைக்கப்பட்டது. மார்லன் சாமுவேல்ஸ் குற்றவாளி என அறிவிப்பு: கிரிக்கெட் ஊழல் தடுப்பு விதியின்படி, 750 டாலருக்கு மேல் பரிசு பொருளாகவோ அல்லது வேறு வழியிலோ தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீரருக்கு பணம் […]
2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன்முலம் ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக உலககோப்பையை கைப்பற்றி உள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் மோசமாக செயல்பட்டனர். பீல்டிங்கில் இந்திய அணியால் சிறப்பாக செயல்படாததால் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கான சிறந்த பீல்டிங் அணிகளின் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் 2023 ஒருநாள் […]
அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக கோப்பை டி20 ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது . இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முக்கிய வீரருமான விராட் கோலியின் பார்ம் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த டி20 உலக கோப்பையில் கோலி, தான் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கணிசமான ரன்களை குவித்தார். இதையடுத்து அக்டோபர் மாதத்திற்கான […]
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை, ஐசிசி அறிவித்துள்ளது. 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி, லண்டனிலுள்ள ஓவல் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் வைத்து நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஓவலில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஐசிசி தலைமை நிர்வாகி ஜியோஃப் அலார்டிஸ் கூறினார். மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான இறுதிப் போட்டியை லார்ட்ஸில் நடத்துவது […]