உலக மக்கள் தொகை இன்று(நவ-15) 800 கோடியை தொட்டு விட்டது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கணக்கிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கணக்கீட்டின் படி உலகத்தின் மொத்த மக்கள்தொகை இன்று நவ-15இல் 800 கோடியை தொட்டு விட்டது. இது மனித வளர்ச்சியின் ஒரு மைல்கல் என்று கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சமீபத்திய கணிப்பின்படி உலக மக்கள்தொகை 2030இல் 850 கோடியையும், 2050இல் 970 கோடியையும், 2100இல் 1040 கோடியையும் எட்டிவிடும் என்று தெரிவித்துள்ளது. வருடாந்திர உலக மக்கள்தொகை […]
பிரதமர் நரேந்திர மோடி இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் உரையாற்றியபோது, கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனிமேல் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது மோடி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்டி உலகுக்கே முன்மாதிரியாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத நாடாக மாறும், 2021ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித் தரப்படும், […]
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் அங்கு […]