தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநரான டாக்டர். பி. சங்கர் ஐ.ஏ.எஸ்., இடமாற்றம் செய்யப்பட்டு, வேளாண்-விவசாயிகள் நலத் துறையின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக பி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி […]
ஆணுறைகள் கூட அரசாங்கம் தரும் என்று எதிர்பார்ப்பீர்கள் என ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜுத் கவுர் பம்ப்ராவின் பேச்சு பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கு ‘சிறுமிகளுக்கான கண்ணியத்தை மேம்படுத்துவோம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழக தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஜுத் கவுர் பம்ப்ரா கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கில் அவர் மாணவிகளுடன் […]
பீகார் மாணவர் சத்யம் காந்தி, தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வை முறியடித்து இந்திய அளவில் 10 வது ரேங்க் பெற்று சாதனை புரிந்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகின.இதில் 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,பீகாரில் ஒரு கிராமப்புற குடும்பத்தில் இருந்து டெல்லி வந்த சத்யம் […]
ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வில் சமூக நீதிக்கு எதிரான விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடும்போது, மிகச்சிறந்த மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமுதாய இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகளை அறிந்துகொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்வில், பல தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் […]