மாணவர்களுக்கு நீட் எவ்வளவு பெரிய அநீதி என்பதை சொல்லும் திரு.ராஜன் கமிடியின் புள்ளிவிவரம். இதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம் என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது.இதனையடுத்து,பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு ஏ.கே.ராஜன் குழு,நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் […]
நீட் தேர்வு நடுநிலையான தேர்வு இல்லை என்பதை ராஜன் குழு அளித்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு, ஆய்வறிக்கையை சமர்பித்தது. மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த தாக்கல் செய்யப்படவுள்ள சட்டமசோதாவில், நீட் தேர்வு […]
தமிழ் நாட்டில் நீட் தேர்வினை நடத்த விடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசின் வாய்சவடாலால் மாணவச்செல்வதை பெற்றோர் இழந்து தவிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: திமுகவின் முதல் கையெழுத்து: “தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியது. நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான […]