இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று தனது முதல் புதிய ராக்கெட், சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (எஸ்எஸ்எல்வி-டி1) பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் (ஈஓஎஸ்-02) மற்றும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆசாடிசாட் ஆகியவற்றை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில்சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (எஸ்டிஎஸ்சி) ஏவியது. “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்”, இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவர்களால் கட்டப்பட்ட 75 பேலோடுகளை உள்ளடக்கிய “ஆசாடிசாட்” என்ற எஸ்எஸ்எல்வி, இணை பயணிகள் செயற்கைக்கோள் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை தற்செயலாக வீசப்பட்டதாகவும், வழக்கமான பராமரிப்பின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நடந்ததாக இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை குறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் விளக்கமளித்தார். அதில், கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆய்வின் போது காலை 7 மணியளவில் ஒரு ஏவுகணை தவறுதலாக சீறிப்பாய்ந்தது. அந்த ஏவுகணை பாகிஸ்தானின் […]
வடகொரியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா நீண்ட தூரம் பயணம் செய்யும் ஏவுகணையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வார இறுதியில் மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த சோதனை ஏவுகணை தண்ணீருக்கு மேல் 1500 கிலோமீட்டர் பயணம் செய்ததாகவும், இந்த ஏவுகணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூல ஆயுதம் எனவும், இது […]
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில […]
பிரமோஸ் ஏவுகணைகளை, சுகோய் போர் விமானங்களுடன் இணைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக, விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, அண்மையில் சுகோய் போர் விமானம் மூலம் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, 40 சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணையை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் இதற்கான பணிகள் […]