Election2024 : கோவையில் போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலதிற்குள் காலஅவகாசம் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்ற தொகுதியான கோவையில் இந்த முறை திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படாமல் திமுகவே நேரடியாக களமிறங்கியதற்கு காரணம் என்னவென்று பலரும் யோசிக்கவே, தாடாலடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]
கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம். கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார். காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்குகிறது. இந்த போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு போராட்டத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தமிழகத்தில் ஆட்சி […]
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கோவை தர்காவில் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். முன்னாள் முதல்வர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கோவையில் ஒரு தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த சிறப்பு பிரார்த்தனையில் […]
டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டலும், புதிய வழக்கு பதிய வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், குற்றச்சாட்டுகளில் இருந்து முழுதாக எஸ்.பி.வேலுமணியை விடுவித்து விட முடியாது. – சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கருத்து. கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு அரசு சார்பில் டெண்டர் கோரப்படத்தில், முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்பி.வேலுமணி தரப்பில் வழக்கு தொடர்பாட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை விசாரித்த […]
யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார் என எஸ்.பி.வேலுமணி பேச்சு. அதிமுகவின் 51 வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. காவல்துறை திமுக கொடியை பறக்க விட்டு, அதிமுக கொடியை பறக்க விடாமல் செய்கின்றனர். எங்கே பார்த்தாலும் சாலைகள் மோசமாக உள்ளது. பொதுமக்கள் திமுகவிடம் சாலைகள் […]
முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை, எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் விடுகையில், அப்போது தமிழக அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி , தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கி முறைகேட்டில் ஈடுப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சென்னை […]
எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் இன்று விசாரணை. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான இரு வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி மனு தொடுத்திருந்தார். இந்த எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், தமிழக அரசின் முறையீட்டை ஏற்று இன்று விசாரிப்பதாக […]
வரும் தேர்தல் 40க்கு 40ம் ஜெயிப்போம். அதே போல வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கும் அதிகமாக ஜெயிப்போம் என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார். கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக அரசின் திட்டங்களை விமர்சித்து பேசியிருந்தார். மேலும், ‘ காவல்துறையினர் அடிமை போல இருக்காதீங்க. மிஞ்சி போனால் டிரான்ஸ்பர் செய்வாங்க. எங்க ஆட்சியில் காவல்துறையினர் காவல்துறையினராகவே இருந்தார்கள். இந்த சூழ்நிலை மாறும். எப்போது […]
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீதான ரெய்டு நடவடிக்கை பற்றி ஓபிஎஸிடம் கேட்கப்பட்டபோது, ‘ அரசு அவர்கள் கடமையை செய்கின்றனர். குற்றமட்டவர்கள் என்று அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்.’ என தனது கருத்தை தெரிவித்தார். இன்று தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது, அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன் […]
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்று விட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டு […]
மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு ஆகியவற்றை மறைப்பதற்காகவே திமுக இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது, அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறனர். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தான் முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை […]
எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கில், மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆட்சி மாற்றத்தை அடுத்து வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி […]
இப்போது இருக்கின்ற திமுக அரசு ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என எஸ்.பி.வேலுமணி பேட்டி. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நீண்ட நாட்களாக தீர்க்காமல் இருக்கும் பத்து முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் மனு அளிக்கலாம் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஆட்சியரிடம் மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக ஆட்சியில் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் முன்னதாக சோதனை நடத்தியபோது அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டிருந்தது.அந்த வகையில்,கோவை வடவள்ளி பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் நண்பரான சந்திரசேகர் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழலில்,கோவை வடவள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.ஏற்கனவே இரண்டு முறை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில்,நேற்று 3-வது முறையாக சந்திரசேகருக்கு சொந்தமான 6 இடங்களில் 10 […]
தமிழகத்தில் முன்னதாக அதிமுக அட்சியில் அமைச்சராக இருந்தபோது சென்னை,கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில்,இது தொடர்பாக 10 வாரத்தில் விசாரணையை முடித்து டெண்டர் முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முதற்கட்ட அறிக்கை: இதனையடுத்து,தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு […]
கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ரூ.110 கோடி முடக்கம்: இதனையடுத்து,எஸ்பி வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் 3 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு. கடந்த அதிமுக ஆட்சியில் 2016-20 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது.பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ரூ.110 கோடியே 93 […]
எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கில் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு நீட்டித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்திய நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்ய […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ. அர்ச்சுணன் சட்டப்பேரவையில் பேசுகையில்:எடப்பாடி தொடங்கி ஓ.பி.எஸ், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்களை பாராட்டி பேசிய போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு,”கேள்வி நேரத்தில் கேள்வியை மட்டும் கேளுங்கள்”, என்றார். பாவம்,அவரை விட்டு விடுங்கள்: உடனே,குறுக்கிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:”எல்லாரும் சட்டப்பேரவையில் பேசும் போது தலைவர்,துணைத் தலைவர் பற்றி பேசினார்கள்.தற்போதுதான் எம்எல்ஏ ஒருவர் கட்சியின் அதிமுக கொறடாவான எஸ்.பி.வேலுமணி பற்றி பேசுகிறார்.பாவம்,அவரை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், மக்களுக்குத் தொண்டாற்றுவதிலும், அரசியல் பணிகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அர்ப்பணிப்புக்கும், உழைப்புக்கும் முன் நிற்க இயலாத திமுக அரசு, தனது தோல்விகளை மறைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்கள் மீது மீண்டும் மீண்டும் […]