இடஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிசி,எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என உதயநிதி ட்வீட். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 10% இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% […]
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்விற்கு இந்தியில் மட்டும் நடத்துவது கண்டனத்திற்குரியதாக எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை இந்தியில் மட்டுமே நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியதாவது: “பொதுத்துறை பொது […]
எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்வேறு விதமான படிப்பு உதவித் தொகைகள் மத்திய அரசின் பங்களிப்போடும், தமிழ்நாடு அரசாலும் வழங்கப்படுகின்றன. 8 லட்ச ரூபாய் ஆண்டு […]
அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை செய்து வந்தது. இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், இது தொடர்பாக மத்திய அரசு கண்டிப்பாக நீதிமன்றத்தை அணுகும் என உறுதி அளித்திருந்தார். […]