எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்வேறு விதமான படிப்பு உதவித் தொகைகள் மத்திய அரசின் பங்களிப்போடும், தமிழ்நாடு அரசாலும் வழங்கப்படுகின்றன. 8 லட்ச ரூபாய் ஆண்டு […]