மாநில இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் ‘நீட்’ தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழக அரசு தாமதிக்கக்கூடாது எனவும்,நீட் தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் […]
உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்ட பின் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்று கூறிய மின்சாரத்துறை அமைச்சரின் வாக்குறுதி ‘அதோகதி’ என்பது சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். “உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும்” என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளது, நீட்தேர்வு ரத்து, எழுவர் விடுதலை, கல்விக்கடன் ரத்து ஆகிய அறிவிப்புகள் போல் இதுவும் குழிதோண்டி புதைக்கப்படும் என்பதையே சுட்டிக் காட்டுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]