எழும்பூர் பழைய கமிஷனர் ஆபீஸ் அருகே பாந்தியன் சாலையில் போலீசாருக்கான மருத்துவமனை 1964-ம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. 30 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவ மனையில் தினமும் 500 போலீசார் வந்து சிகிச்சை பெற்று வந்தனர். பழமையான இந்த மருத்துவ மனையை நவீனப்படுத்த 2016-ம் ஆண்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. தற்போது 4 மாடிகளுடன் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பில் புதிய கட்டிடம் […]