அசாமின் தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில் இந்திய-வங்காளதேச எல்லையில் உள்ள ஆழமான ஏரியில் நேற்று எல்லைப் பாதுகாப்புப் படையின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒரு வீரர் உயிரிழந்தார். மற்றொருவர் காணாமல் போனார். இந்திய-வங்காளதேச எல்லையை ஒட்டிய மங்காச்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜௌடாங்கா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏரியில் இருந்து ஒரு வீரரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், வாகனத்தின் ஓட்டுநர் இன்னும் காணவில்லை என்றும் மூத்த அதிகாரி தெரிவித்தார். மூத்த அதிகாரி சிகே உபாத்யாய் கூறுகையில், ஓட்டுநர் உட்பட […]