MK Stalin: நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு. தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏறுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களே கூறுகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 2021-ல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, திமுக ஆட்சியில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. […]