மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மீட்பு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கும் நிலையில், இது ஒருசில இடங்களில் வெடித்தும் வருகிறது. இதில் குறிப்பாக, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில் தான் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழப்புகள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றன. அதுவும், எரிமலைகள் வெடித்துச் சிதறும் போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பூமிக்கு அடியில் இருக்கும் […]
பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலுக்கு அடியில் உள்ள ஹங்கா டோங்கா – ஹங்கா ஹாப்பாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து வருவதால் தற்போது கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.இந்த எரிமலை டோங்காவில் உள்ள ஃபோனுவாஃபோ தீவில் இருந்து தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. எரிமலை வெடிப்பு மற்றும் கடல் சீற்றத்தால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அருகில் […]
கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீட்டர்கள் தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. பியூகோ என்றால் ஆங்கிலத்தில் தீ என பொருள்படும். இதனருகே சுற்றுலாவாசிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது. இங்கு காபி தோட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலையில், பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவிற்கு செந்நிற, வெப்பம் மிகுந்த லாவா வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல், தலைநகர் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியுள்ளன. இதில் […]