திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரனோ பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த இரண்டு நாட்களாக என்னை நேரில் சந்தித்தவர்கள் மற்றும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.