எம்.எல்.ஏக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை, செயல்படுத்த 10 குழுக்கள் அமைத்து உத்தரவு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தங்களது தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை, அந்தந்த ஆட்சியர்களிடம் மனுவாக அளிக்குமாறு தெரிவித்திருந்தார். அதன்படி அனைத்து தொகுதி எம்எல்ஏ-க்களும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் எம்எல்ஏக்களால் அளித்த 10 கோரிக்கைகளை முன்னுரிமையில் நிறைவேற்ற உங்கள் தொகுதியில் […]
தமிழக சட்டப்பேரவை குறித்து இபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது போல, ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டத்தை நேற்று தனியார் ஹோட்டலில் நடத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அண்மையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நடைபெறுவதை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுசெயலாளர், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், […]
எம்.எல்.ஏக்கள் , எம்.பிக்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை விவரங்களை உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான குற்றங்கள் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்பாய் பொதுநல வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அமர்வு, இதுவரை 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் […]
இன்று எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரிவால் வேட்பாளராக களம் இறங்கினார். இந்நிலையில், செப்.30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் […]
ஆம்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வின் செருப்பை, அவரது கட்சியைச் சேர்ந்த தலித் நிர்வாகி ஒருவர் கையில் துாக்கி சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ளது ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி இந்த கிராமத்தில் தற்போது கனமழை செய்த காரணத்தால் மழையால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிடதி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன், கடந்த 30ம் தேதி அங்கு சென்றார். இந்நிலையில் பாதையானது சேறும், சகதியுமாக இருந்த காரணத்தால், தன் செருப்பை கழற்றிவிட்டு, வெறும் காலில் நடந்து சென்றுள்ளார். […]
கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள குமாரசாமி மந்திரிசபை கடந்த 6-ந்தேதி விஸ்தரிக்கப்பட்டது. அதில், மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்த முன்னாள் மந்திரியும், லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக அங்கீகரிக்க குரல் கொடுத்தவருமான எம்.பி.பட்டீலுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. அவருக்கு ஆதரவாக 15 முதல் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், கர்நாடக காங்கிரஸ் […]