அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? என்றும் இதன் பின்னணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாரா? எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஜோதிமணி எம்பி கூறியதாவது, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், பிவி ரமணா, எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வீரமணி ஆகிய 4 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு, ஆளுநர் […]
கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திருவிக என்பவரை அழைத்துக்கொண்டு, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சிலர் முன்னாள் அமைச்சர் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும், […]
லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராக இயலாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து குவித்ததாகவும்,போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு,ஊழல் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,இக்காலகட்டத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் ,போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு,ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் அவர் வீடு உட்பட 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் தொகுதியில் […]
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாகவும், இதற்கு தலைக் கவசம் அணியாததும், சீட் பெல்ட் அணியாததுமே காரணம் என்று கூறிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வு வை பாடத்திட்டத்தில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 29 வது சாலை பாதுகாப்பு வார விழாவை துவக்கிவைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஊதிய உயர்வு மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக பொருளாதார நிதிச்சுமையில் […]