ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் செய்தியை பகிர்ந்ததை விமர்சனம் செய்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவீட் செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி சுவெங்கடேசன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இது ஹிந்தியவா? இந்தியாவா? ஹிந்தி திணிப்பை கைவிடுங்கள் என பதிவிட்டுள்ளார். அதாவது, இந்திய ரயில்வே துறை தனது டிவிட்டர் பக்கத்தில், ரயில்வே ஆட்சேர்பு தொடர்பாக யாரிடமும் ஏமாற வேண்டாம். அது உங்களை தகுதியற்றவர்களாக மாற்றிவிடும்’ என பொதுவான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
மதுரை:தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடத்திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழக புதிய ரயில் வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வெறும் ஆயிரம் ரூபாய்: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று […]
மதுரை:குடியரசுத்தலைவர் தனது உரையில் அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதை பற்றி பேசுகிறார்.ஆனால்,கடந்த 75 ஆண்டுகளாக போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கிவிட்டு யாருக்காக போடப்படுகிறது புதிய அடித்தளம்? என்று எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 75 வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில்,அடுத்த 25 ஆண்டுகளில் புதிய அடித்தளம் போடுவதை பற்றி குடியரசுத்தலைவர் உரை பேசுகிறது.ஆனால், 75 ஆண்டுகளாக ஏற்கனவே போடப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கி விடுவோம் என்பதுதான் இதன் பொருளா என்று மதுரை எம்பி […]
நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்றும்,நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். 2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 2022 நீட் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே,நீட் என்றாலே குழப்பம்,பாதிப்பு,மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? என்று கேள்வி எழுப்பிய மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,நீட் […]
மதுரை:தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? மாணவர்களின் வாய்ப்பினை பிரசார் பாரதியின் விதியை உடனே மாற்ற வேண்டும் என்று கோரி மத்திய அமைச்சருக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம். தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? என்றும்,தமிழ்நாடு மாணவர்களின் வாய்ப்பினை பாதிக்கும் பிரசார் பாரதியின் விதியை உடனே மாற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மற்றும் பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் சசி எஸ்.வேம்பதி […]
மதுரை:கொரோனா நெருக்கடி காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் இழப்புகள் குறித்து உரிய சான்றிதழ் பெற முடியாதவர்களுக்கு தன்னார்வலர்களும்,இயக்கத்தோழர்களும் உதவ வேண்டுமென எம்பி சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால நலனுக்கான அரசின் நிவாரணங்களை பெற்றுத் தரும் முயற்சிகள் கூடுதலாக்கப்பட வேண்டும் என்று தன்னார்வலர்களுக்கு மதுரை எம்பி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரிருப்பதவது: கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்த குழந்தைகளின் […]
மதுரை:நவராத்திரி விழாவை முன்னிட்டு போடப்பட்ட உத்தரவு;இனி இதுபோன்ற தவறு நடக்காது என எம்பி சு.வெங்கடேசன் அவர்களுக்கு யூனியன் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. நவராத்திரி விழாவை கொண்டாடும் வகையில், ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று யூனியன் வங்கி தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதற்கும்,மேலும்,அவ்வாறு கடைபிடிக்காதவருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று கூறி,யூனியன் வங்கி தலைவருக்கு சு.வெங்கடேசன் அவர்கள் […]
விவசாய சட்டங்கள் வாபஸ் என பிரதமர் அறிவிப்பு. மக்கள் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020, நவம்பர்- 25 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். […]
மதுரை:சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியதாகவும், ஏழு நாட்களில் பணி முடியும் என்றும் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இனி முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.இது நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டவற்றை சாதாரண இரயில்களாக மாற்ற வேண்டும் என்றும், முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் […]
மதுரை:வைகை அணையிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் அதனை ஒட்டியுள்ள கரையோர மக்கள் கவனமாய் இருக்கவும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால்,தமிழகத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில்,வைகை அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.இதனால், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு […]
ஹஜ் யாத்திரை புறப்பாடு மையங்கள் பற்றிய முடிவு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும்,அதில் சென்னை சேர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு புறப்பாடு மையங்கள் 21 இல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது. இப்பொழுதும் அதே எண்ணிக்கை என்பது பொறுத்தமல்ல எனவும்,ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய சிறுபான்மை நல அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அவர்களுக்கு […]
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்விற்கு இந்தியில் மட்டும் நடத்துவது கண்டனத்திற்குரியதாக எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை இந்தியில் மட்டுமே நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியதாவது: “பொதுத்துறை பொது […]
உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டதற்காக,இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து இந்திய ரயில்வே உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் […]
சென்னை தேர்வு வாரியத்தின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே காலி இடங்களுக்கு நியமிக்க வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்த இந்திய ரயில்வேயின் உத்தரவை ரயில்வே அமைச்சர் ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கும் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் கடிதம் […]
அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜூலை 07, 2021 அன்று,மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள், அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில்,அவர் எழுதிய கடிதத்திற்கு அஞ்சல் இயக்குனரகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக […]
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தின் விபரம் கீழே தெரவிக்கப்பட்டுள்ளது. தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “தபால் துறையின் வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.அதாவது,தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு […]