நாடு முழுவதும் 612 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிக இடங்கள் (10,725), அதைத் தொடர்ந்து கர்நாடகா (10,145) இடங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் 9,895 எம்பிபிஎஸ் இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் 9,053 இடங்களும் உள்ளன. நாட்டில் மொத்தமுள்ள 91,927 இடங்களில் 48,012 அரசு இடங்கள்,அதில் 43,915 தனியார் இடங்கள். மத்திய அரசு வெளியிட்ட முழு பட்டியலை இந்த லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். MBBS Seat list
தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது. மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு,அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள் உள்ளன.மேலும்,சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்நிலையில்,தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.அதன்படி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் […]