அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் கூறுகையில், அதிமுக ஆட்சிக்கு எதிராக ஒருபோதும் நான் செயல்பட மாட்டேன் […]