பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கேரள தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலேயே பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் […]