மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜகவினர் இடையே தொடர் வாதங்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாநிலங்களவையில் பாஜகவினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் அமளி ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில் நடந்த எல்லை மோதல் குறித்து பாஜக – காங்கிரசார் மத்தியில் விவாதம் ஏற்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பேசிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசினார். ஆனால் […]
திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் 3500 கோடி அளவிலான திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று எதிர்கட்சியினர் விமர்சிக்கின்றனர். இவர்கள் செய்தித்தாள்களையும் ஊடகங்களையும் தினசரி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சி […]
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைபடுகின்றனர் என நிர்மலா சீதாராமன் பேச்சு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டு நாடாளுமன்றத்தில் உள்ள சிலர் பொறாமைபடுகின்றனர். பொருளாதாரம் வளர்ந்து வருவது எதிர்க்கட்சியினருக்கு பிரச்சினை ஏற்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை கண்டு பெருமைப்படாமல் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர, போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்! சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், […]
பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கோட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், டெல்லியில் பாஜக எம்.பி-க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.